உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுக்கோட்டை / வடமாநில தொழிலாளர்களை தாக்கும் போதை ஆசாமிகளால் வடமாநிலத்தவர்கள்

வடமாநில தொழிலாளர்களை தாக்கும் போதை ஆசாமிகளால் வடமாநிலத்தவர்கள்

வடமாநில தொழிலாளர்களை தாக்கும் போதை ஆசாமிகளால் வடமாநிலத்தவர்கள் பீதி | Pudukkottai | An intoxicated man attacked a North Indian railway gatekeeper. புதுக்கோட்டை நமணசமுத்திரம் மேலதேமுத்துப்பட்டி ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றுபவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் வயது 31. நேற்று இரவு கேட் கீப்பர் தீரஜ்குமார் பணியில் இருந்த போது ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மேலதேமுத்துப்பட்டி ரயில்வே கேட்டை கெட் கீப்பர் தீரஜ்குமார் மூடியுள்ளார். அந்த வழியாக வந்த மேலதேமுத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் கஞ்சா போதையில் கேட்டை திறக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரயில் வரும் நேரம் என்பதால் கேட் கீப்பர் தீரஜ்குமார் ரயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக் கத்தியை வைத்து தீரஜ்குமார் வயிற்றில் குத்த முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட திரஜ்குமார் தடுத்ததால் கை கட்டைவிரல் இடுக்கு பகுதியிலும் வயிற்றிலும் கீறல் விழுந்து காயமடைந்தார். காயமடைந்த கேட் கீப்பர் தீரஜ்குமார் திருச்சி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். தாக்குதல் நடத்திய கார்த்திக்கை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தமிழகத்தில் தொடரும் வடமாநில தொழிலாளர்களை தாக்கும் கும்பலை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜன 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை