/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ புரோக்கர்கள் அட்டகாசம் ஒழிக்கப்படுமா | Ramanathapuram | Chilli farmers strike
புரோக்கர்கள் அட்டகாசம் ஒழிக்கப்படுமா | Ramanathapuram | Chilli farmers strike
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குண்டு மிளகாயை உத்தரகோசமங்கை பஜாரில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். புரோக்கர்கள் ஒன்றுகூடி மிளகாயை குறைந்த விலைக்கு கேட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மிளகாய் விவசாயிகள் செய்யாலூர் விலக்கு பகுதியில் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நடுவே டிராக்டரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். உத்திரகோசமங்கை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புரோக்கர்களை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.
ஏப் 08, 2024