முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு |Ramanathapuram | District level chess tournament
ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் மற்றும் செய்யது அம்மாள் கல்லூரி சார்பாக 25 வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி தேவிபட்டிணம் செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பல்வேறு பிரிவுகள் மற்றும் வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு வயது பிரிவினர் போட்டியிலும் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஹாக்கி வீரரும் போலீஸ் எஸ்ஐயுமான சரவணகுமார் பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.