சிவாச்சாரியார்கள்வேத மந்திரம் முழங்ககோபுரகலசத்திற்கு புனிதநீரூற்றிவிமர்சையாககும்பாபிஷேகம் நடைபெற்றது
சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றி விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது / Mariamman temple consecration/ Ramanathapuram சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுர சமஸ்தானத்தை சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில், ஒரு பக்தரின் கனவில் மாரியம்மன் தோன்றினார். கடலில் நீங்கள் வீசும் வலையில் நான் கிடைப்பேன் என கூறி மறைந்தார். திடுக்கிட்டு எழுந்த பக்தர், காலையில் கிராமத்தினரிடம் விவரத்தை கூறினார். மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது சுமார் இரண்டரை அடி அம்மன் சிலை கிடைத்தது. பரவசமடைந்த பக்தர்கள் அம்மனை வைத்து பூஜித்து வந்தனர். இதை அறிந்த சேதுபதி மன்னர்கள், அம்மனுக்கு கோயில் எழுப்பினர். இன்றும் கடலில் கிடைத்த அம்மன் சிலை கோயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சோழகன் பேட்டை, முத்துக்குடா, புதுப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களின் இஷ்ட தெய்வம் சந்தன மாரியம்மன். உடலில் உள்ள நோய்கள் நீங்கி, குழந்தைப்பேறு கிடைக்க, மக்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோயிலின் கும்பாபிஷேகம், ஜூலை 14ம் தேதி அனுஞ்கை மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அக்னி சங்கிரஹனம், கும்பலாகாரம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. மேளதாளம் இசைக்க கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றினர். ட்ரோன் உதவியுடன் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து மனம் உருகினர்.