மின்னொளி அலங்காரத்தில் தேர் பவனி | Temple Festival | Kamuthi
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் ஸ்ரீ சாந்த கணபதி கோயிலில் ஸ்ரீ சுயம்பு லிங்க துர்க்கை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இதன் 34 ம் ஆண்டு ஆடி கொடை விழா கடந்த 9 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒன்பது நாள் நடக்கும் விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரனைகள் நடக்கிறது. ஏழாம் நாள் விழாவில் துர்க்கை அம்மன் மின்னொளி அலங்கார தேரில் அபிராமம் முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்தார்.
ஆக 16, 2024