உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / 4 மாதங்களில் மாயமாகும் | Rameswaram | The historically significant Pamban Bridge bids farewell

4 மாதங்களில் மாயமாகும் | Rameswaram | The historically significant Pamban Bridge bids farewell

4 மாதங்களில் மாயமாகும் | Rameswaram | The historically significant Pamban Bridge bids farewell | Bhoomi Pooja performed for safe dismantling. தமிழகத்தின் மண்டபம் நிலப்பரப்பரையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலமும், பாம்பன் சாலைப் பாலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் 1914ல் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்தியாவில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் பாலம் இதுவாகும். பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக நடுவில் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப் பாலம் அமைக்கப்பட்டிருந்ததே இதன் சிறப்பு. பாலம் 1964ம் ஆண்டு புயலில் சேதமடைந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டுப் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. நூற்றாண்டுகளை கடந்த இந்தப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், இதன் அருகிலேயே 2019ல் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பாலப் பணிகள் 2020ம் ஆண்டில் தொடங்கி துரிதமாக நிறைவடைந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பாம்பன் பழைய பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் என்ற ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு நிறுவனம் பாம்பன் பழைய பாலத்தை அகற்ற ஒப்பந்தம் கோரி டெண்டர் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 2.3 கி.மீ நீளம் கொண்ட இப்பாலத்தில் நடுவில் உள்ள தூக்குப்பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை 2.53 கோடி ரூபாய் செலவில் அகற்றக் கோரப்பட்டிருந்தது. ரயில்வே நிர்வாகம் டெண்டர் வழங்கி பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற பூமி பூஜை இன்று நடைபெற்றது. 4 மாதத்தில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பழைய ரயில் பாலம் வரலாற்று சிறப்புமிக்க பாலம் என்பதால் அதனை அகற்றும் போது சேதம் ஏற்படாமல் இருப்பதற்காக பழைய ரயில் பாலத்தை அடுக்கடுக்காக வெட்டி எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்காக எண் ஒன்றில் இருந்து வரிசைப்படியாக பாலம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் படிப்படியாக ரயில் பாலம் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என ரயில்வே நிர்வாகம் கூறியது. 111 ஆண்டுகள் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்றி, ரயில் அருங்காட்சியத்தில் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை