எஸ்ஐசரவணன் குடும்பத்தினரிடம் ₹25 லட்சம்அரசுநிதி வழங்கல்|Police SI killed by electrocution|Paramakudi
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன், வயது 36. பரமக்குடி நகர போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக வேலை பார்த்தார். முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை முடிந்த நிலையில், பரமக்குடியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றும் பணி எஸ்ஐ சரவணன் தலையில் போலீசார் மேற்கொண்டனர். அப்போது இரும்பு கொடி கம்பியை எஸ்ஐ சரவணன் அகற்றியபோது மின்சார கம்பி மீது கொடிக்கம்பம் உரசியதில் ஷாக் அடித்து எஸ்.ஐ, சரவணன் ஸ்பாட்டிலேயே பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த ஊர் கே. நெடுங்குளம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, டி ஐ ஜி அபினவ் குமார் மற்றும் ராமநாதபுரம் எஸ் பி சந்தீஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வீர வணக்கம் செய்தனர். 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சரவணனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் நான்கு வயது ஆண் மகன் மற்றும் ஒன்றை வயது பெண் கைக்குழந்தையும் உள்ளனர். எஸ்ஐ குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் வங்கி காசோலையை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கினார். நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் உயிரிழந்த எஸ்ஐ சரவணனின் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.