உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை துவங்கியது | Thevar gurupuja | Pasumpon

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை துவங்கியது | Thevar gurupuja | Pasumpon

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்று ஆன்மிக விழாவாகவும், 29ம் தேதி அரசியல் விழாவாகவும், 30ம் தேதி அரசு விழாவாகவும் நடைபெறும். தேவர் குருபூஜை ஆன்மிக விழா இன்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் தூங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் புராண பாடல்கள் பாடி குருபூஜை விழா கோலாகலமாக தொடங்கியது. வேத மந்திரங்கள், இசை வாத்தியங்களுடன்,கடம் புறப்பட்டு கும்பநீர் எடுத்துச் செல்லப்பட்டு தேவர் சிலையில் புனிதநீர் ஊற்பட்டு அபிஷேகம் , தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி