மேளதாளம் முழங்க சீர்வரிசை ஊர்வலம் | Ranipet | Kamachi Ambal Sametha Ekambaranath Temple
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பூக்கார வீதி காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேர்த் திருவிழா கடந்த 15 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஊர் பொதுமக்கள் மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து மூலவர் காமாட்சி மற்றும் ஏகாம்பரநாதருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மணி மண்டபத்தில் காமாட்சி மற்றும் ஏகாம்பரநாதர் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க காமாட்சி அம்பாள் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.