உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / மங்கல வாத்தியம் முழங்க சுவாமி மாலை மாற்றி கோலாகலம் | Vellore | Vannivedu Varadaraja Perumal temple

மங்கல வாத்தியம் முழங்க சுவாமி மாலை மாற்றி கோலாகலம் | Vellore | Vannivedu Varadaraja Perumal temple

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வன்னிவேடு ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவர் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு பூ மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். மங்கல வாத்தியங்கள் முழங்க பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாவில் வன்னிவேடு உள்ளிட்ட 6 கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை