உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / மயிலார் எருது விடும் போட்டியில் மின்னல் வேக காளைகளுக்கு பரிசு மழை | Ranipet | Ponniyamman Temple

மயிலார் எருது விடும் போட்டியில் மின்னல் வேக காளைகளுக்கு பரிசு மழை | Ranipet | Ponniyamman Temple

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாங்குப்பத்தில் பொன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மயிலார் எருது விடும் போட்டி நடந்தது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு காளைகளாக ஓடுதளத்தில் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. முதல் பரிசாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசாக 90 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மொத்தம் 62 மாடுகளுக்கு பரிசு கிடைத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் போட்டியை ரசித்தனர்.

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி