சட்ட விரோத கருக்கலைப்பு கும்பல் சிக்கியது
சட்ட விரோத கருக்கலைப்பு கும்பல் சிக்கியது | Young Women pregnant for the third time | Abortion gang arrested | Attur | Salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 25 வயது இளம் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது கணவர் விவசாய கூலித் தொழிலாளி. தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என அச்சமடைந்தனர். இதனால் கருக்கலைப்பு செய்ய தம்பதி முடிவு செய்தனர். இதற்காக உறவினர் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நாராயணன் என்பவர் பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்தார். பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை சேலம் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் நந்தினி விசாரணை மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதுபாலா, புவனேஸ்வரி, கௌரி ஆகியோர் கருக்கலைப்பு செய்யும் நாராயணனுக்கு உதவியது உறுதியானது. கருக்கலைப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆத்தூர் அரசு ஹாஸ்பிடல் தலைமை டாக்டர் ஜெயலஷ்மி தலைவாசல் போலீசில் புகார் கூறினார். மூவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த நாராயணனனும் கைது செய்யப்பட்டார். சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கருக்கலைப்பு கும்பல் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து சேலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.