உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஆத்துார் நகராட்சி திமுக கவுன்சிலர் அநாகரீக பேச்சு | dmk councilor indecent speech | Attur municipali

ஆத்துார் நகராட்சி திமுக கவுன்சிலர் அநாகரீக பேச்சு | dmk councilor indecent speech | Attur municipali

ஆத்துார் நகராட்சி திமுக கவுன்சிலர் அநாகரீக பேச்சு / dmk councilor indecent speech / Attur municipality / salem சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் தங்கவேலு பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஹிந்தி படி என சொல்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அதிமுக எம்எல்ஏக்கள் மக்களிடம் ஓட்டு கேட்டு வந்தால், அவர்களை பொது மக்களை விட்டு துடைப்பத்தால் அடிப்போம் என்றார். speech: தங்கவேலு திமுக கவுன்சிலர் 00:40 - 01:32 இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மக்கள் பிரச்சனை பேசாமல் மற்ற பிரச்சனைகளை ஏன் பேச வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள் தீர்மானங்களில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாகக் கூறினர். தங்களுக்கு பேச அனுமதி மறுப்பதாக கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து நுழைவாயில் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை