உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / திமுகவினரால் சிறை பிடிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மீட்பு | Salem | Sale of Panparag Gutkha

திமுகவினரால் சிறை பிடிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மீட்பு | Salem | Sale of Panparag Gutkha

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி 30 வது வார்டு கவுன்சிலர் சந்திரா. இவரது கணவர் ராமச்சந்திரன் திமுக வார்டு செயலாளர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கண்ணன் கடந்த நவம்பர் 28 ம் தேதி சோதனை செய்தார். கடையில் பான் பராக், குட்கோ உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தார். கடைக்கு சீல் வைக்க முயன்றபோது திமுகவினர் மற்றும் உறவினர்கள் கண்ணனை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். போலீசார் கண்ணனை மீட்டு அனுப்பி வைத்தனர். அதிகாரியை திமுகவினர் சிறைப்பிடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் நீண்ட இழுபறிக்கு பிறகு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி