/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது | Fake Gold Loan | Canara Bank | Oneman Arrest | Attur | Salem
வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது | Fake Gold Loan | Canara Bank | Oneman Arrest | Attur | Salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கனரா வங்கி கிளை உள்ளது. இங்கு ஆத்தூரைச் சேர்ந்த பாலச்சந்தர், வயது 45, நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்தார். சில நாட்களுக்கு முன் வங்கி விதிகளின்படி பிற வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் கனரா வங்கி கிளையின்அடகு நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது கூடமலையைச் சேர்ந்த சேகர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரது வங்கி கணக்கில் 84 சவரன் போலி நகைகள் அடகு வைத்து 41 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசில் வங்கி மேலாளர் மித்ராதேவி அளித்த புகாரின் அடிப்படையில் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர் கைது செய்யப்பட்டார்.
ஜன 28, 2025