உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அம்மன் சிலையை மிஷின் மூலம் அறுத்து எடுத்து அழிப்பு

அம்மன் சிலையை மிஷின் மூலம் அறுத்து எடுத்து அழிப்பு

அம்மன் சிலையை மிஷின் மூலம் அறுத்து எடுத்து அழிப்பு / Gang vandalizes Amman statue / Malliyakarai / Salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை நீரோடை பகுதியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இரு தரைகளில் பெரியாண்டிச்சி அம்மன் படுத்தக் கோலத்தில் அருள்பாலிக்கும் சிமென்ட் கான்கிரீட் சிலை இருந்தது. அனைத்து சமுதாய மக்களும் வழிபடும் இக்கோயிலில் நேற்று நள்ளிரவு புகுந்த கும்பல் சிலையை இயந்திரம் மூலம் துரோடு அறுத்து எடுத்து இருந்த இடம் தெரியாமல் அழித்து எஸ்கேப் ஆகினர். இன்று காலை சுவாமி கும்பிட சென்ற பக்தர்கள் அம்மன் சிலை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆர்டிஓவிடம் முறையிட்டனர். ஆர்டிஓ உத்தரவுப்படி ஸ்பாட்டிற்கு விரைந்த மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். தனிப்படை அமைத்து சிலையை அகற்றிய கும்பலை தேடுகின்றனர்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை