உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / நள்ளிரவு 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில் | iron rode across the train

நள்ளிரவு 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில் | iron rode across the train

நள்ளிரவு 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில் / iron rode across the train / conspiracy to overturn the train / salem கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னை நோக்கி நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. சேலம் அருகே சங்ககிரி அடுத்த மாவேலிபாளையம் - மகுடஞ்சாவடி இடையே சென்றபோது தண்டவாளத்தில் இருந்த பொருள் மீது ரயில் மோதியதில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. ரயில் லோகோ பைலட் சமர்த்தியமாக ரயிலின் வேகத்தைக் குறைத்து நிறுத்தினார். கீழே இறங்கி பார்க்கையில் தண்டவாளம் குறுக்கே தண்டவாளம் போட பயன்படும்10 அடி நீள இரும்பு ராடு இருந்தது. ரயில் இன்ஜினில் இரும்பு ராடு சிக்கியதால் என்ஜினில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. நள்ளிரவு பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் துாக்கம் விழித்தனர். ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் பீதியில் உறைந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என அச்சப்பட்டனர். byte: குடியிருப்புவாசி 00:02 - 00:42 ஸ்பாட்டிற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் சௌரவ்குமார் நேரில் ஆய்வு செய்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ரயில்வே டிஎஸ்பி பாபு தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைப்பு விசாரணை உடனே துவங்கப்பட்டது. ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் விபத்தால் 2 மணி நேரம் தாமதமாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை புறப்பட்டு சென்றது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி