உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / மாணவர் இருவர் உயிரை பறித்த மொபைல் கேம் | Rail accident | two students death | Attur | Salem

மாணவர் இருவர் உயிரை பறித்த மொபைல் கேம் | Rail accident | two students death | Attur | Salem

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தினேஷ், வயது16. அதே பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் அரவிந்த், வயது 16. இருவரும் ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்தனர். இன்று காலை 11.40 மணிக்கு ஏத்தாப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து இருவரும் தனித்தனியாக மொபைலில் மெய்மறந்து கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மாணவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தினேஷ் ஸ்பாட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அரவிந்த் ஹாஸ்பிடல் செல்லும் வழியில் இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். மொபைல் கேம் மாணவர் இருவர் உயிரை பறித்த துயரம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை