உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கூலி தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை | Pocso case accused conviction | Attur

கூலி தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை | Pocso case accused conviction | Attur

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் இருசன், வயது 55 மற்றும் ஆறுமுகம், வயது 49. இருவரும் கடந்த 2019 நவம்பர் 9ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தனர். இதுதொடர்பான புகாரில் தலைவாசல் போலீசார் காமக்கொடூரன்கள் இருசன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் ஆறுமுகம் கடந்தாண்டு இறந்து விட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, கூலித் தொழிலாளி இருசனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை