அட்வான்ஸ் ₹10,000 வாங்கும் போது வசமாக சிக்கிய தாசில்தார் | Athur | bribe | Tahsildar arrested
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி செல்வம் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது விவசாய நிலத்தை ஒட்டி உள்ள நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்களை அளவீடு செய்ய 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தரும்படி தாசில்தார் பாலகிருஷ்ணன் கேட்டார். அட்வான்ஸ் 10 ஆயிரம் ரூபாயை உடனே தர வேண்டும் என தாசில்தார் அடம்பிடித்தார். லஞ்சம் தர மனமில்லாத மஞ்சுளா சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை தாசில்தாரிடம் மஞ்சுளா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீசார் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பறிமுதல் செய்தனர்.