அவ்வையார் முக்தியடைந்த கோயில் என ஆன்மிகவாதிகள் கருத்து | Salem | Vidhakar Vinayagar Temple
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் மிக பிரசித்தி பெற்றது. இங்கு அவ்வையாரை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோயிலை ஒட்டியுள்ள திருமணிமுத்தாற்றின் அருகே கோயில் இருப்பதாக பல ஆண்டுகளாக கருத்து நிலவி வந்தது. பசுமை தமிழகம் என்ற அமைப்பினர் கோயிலை மீட்டெடுக்கும் முயற்சியாக பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டினர். நான்கடி உயரம் உள்ள ஒரே பாறையில் விநாயகர் இரண்டடி சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தது. தூண்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் பாடல் பாடி வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன. இங்குதான் அவ்வையார் முக்தியடைந்ததாக ஆன்மிகவாதிகள் கருதுகின்றனர். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விநாயகரை வணங்கி செல்கின்றனர். கோயிலை பாதுகாத்து வழிபடும் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.