சிவகங்கை பாஜ வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட காங்கிரஸ் எதிர்ப்பு | opposition to competing
சிவகங்கை பாஜ வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட காங்கிரஸ் எதிர்ப்பு | opposition to competing in the lotus symbol சிவகங்கையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஹரீஸ் தலைமையில் நடந்தது. இதில் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தியின் முதன்மை ஏஜன்ட் சேங்கைமாறனும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பா.ஜ. சார்பில் போட்டியிடும் தேவநாதன் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர். அவர் பா.ஜ.,வுடன் தொகுதி உடன்பாடு தான் செய்துள்ளார். அக்கட்சியினர் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. அவரது சொத்து பட்டியலில் ஏராளமான குளறுபடி உள்ளது. அவருக்கு தாமரை சின்னம் வழங்கக் கூடாது. அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி புகார் மனு அளித்தார். வேட்பு மனு பரிசீலனையின் போது பா.ஜ. வேட்பாளர் மனுவை ஏற்பதாக கலெக்டர் அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ. மனுவை ஏற்பதற்கான எழுத்து வடிவில் பதில் அளிக்குாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து பா.ஜ. வேட்பாளரின் வழக்கறிஞர் ஜனார்த்தனம் கூறுகையில், பா.ஜ.வின் வெற்றி உறுதி ஆனதால், அதற்கு பயந்து காங்கிரஸ் வேட்பாளரின் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்து, தாமரை சின்னம் வழங்கக் கூடாதென புகார் கொடுத்துள்ளார். எங்கள் வேட்பாளர் வேட்பு மனுவுடன் பா.ஜ. உறுப்பினர் என்பதற்கான ஆதாரமும் வைத்துள்ளதால் மனுவை ஏற்பதாக கலெக்டர் தெரிவித்து விட்டார். தோல்வி பயத்தால் காங்., தரப்பினர் எதிர்க்கின்றனர் என ஆவேசமாக கூறினார்.