/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ தென்காசி திமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம் | Tenkasi | DMK councillor Husband stabbed
தென்காசி திமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம் | Tenkasi | DMK councillor Husband stabbed
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் வயது 56. அரசு போக்குவரத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி பூமா. இவர் மேலகரம் பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலர். மேலகரம் பேரூராட்சி தலைவராக வேணி உள்ளார். இவரது மாமனார் சுடலை. இவர் மேலகரம் பேரூராட்சி திமுக செயலாளர். பேரூராட்சி பணிகள் ஒதுக்கீடு தொடர்பாக சுடலைக்கும், சண்முகசுந்தரத்திற்கும் முன் விரோதம் உள்ளது. இன்று மதியம் மேலகரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆக 10, 2024