உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை | ₹25,000 worth race car production | Thenkasi

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை | ₹25,000 worth race car production | Thenkasi

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மினி ரேஸ் கார் ஒன்றை தயாரித்து சாதனை படைத்தனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஹர்ஷத், சக்தி, மீரான் மற்றும் திலக் ஆகியோர் இணைந்து மூன்று சக்கர மினி ரேஸ் காரை உருவாக்கினர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த மினி ரேஸ் கார் 400 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது. இருவர் பயணிக்கலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது. ஹோண்டா ஆக்டிவா என்ஜின் மற்றும் ட்யூப் லெஸ் டயர் ஆகியவை கொண்டு மினி ரேஸ் காரை வடிவமைத்தோம். டூவீலரை ஸ்டார்ட் செய்வது போல் இந்த ரேஸ் காரையும் சுலபமாக ஸ்டார்ட் செய்யலாம். தங்களது பெற்றோர் உதவியுடன் இந்த காரை 25 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்தோம். வேகமாக காரை இயக்கலாம். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் பொருத்தப்பட்டுள்ள இந்த ரேஸ் காரில் பவர் ஸ்டீரிங் வசதியும் உள்ளது. ஆட்கள் அமர்வதற்கு வசதியாக இரும்பு மற்றும் பலகை கொண்டு சீட்டுகளை உருவாக்கினோம் என்றனர். மினி ரேஸ் காரை உருவாக்கி இளம் விஞ்ஞானிகளாக வலம் வரும் மாணவர்களை பலரும் பாராட்டினர்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை