உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / வாலிபர் இருவர் கைது | 2 arrested | gang rape

வாலிபர் இருவர் கைது | 2 arrested | gang rape

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயது பெண். திருமணமான இவர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்ப பஸுக்காக காத்திருந்தார். அவ்வழியாக ராயந்தூரை சேர்ந்த பிரவீன் வயது 32 என்பவர் டூவீலரில் சென்றார். லிப்ட் கொடுப்பதாக கூறி அப்பெண்ணை பிரவீன் டூவீலரில் ஏற்றினார். வேறொரு டூவீலரில் பிரவீன் நண்பர் ராஜ்கபூர் பின் தொடர்ந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் டூவீலரை இருவரும் நிறுத்தி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்தனர். பெண்ணை நள்ளிரவு தவிக்க விட்டு இருவரும் தப்பியோடினர். அப்பெண் போலீசில் புகார் கூறினார். விசாரணை நடத்திய போலீசார் பிரவீன் மற்றும் ராஜ்குமாரை கைது செய்தனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை