/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ மாலை மாற்றல் ஊஞ்சல் உற்சவத்துடன் திருக்கல்யாணம் | Sitha Raman Thirukalayanam | Thanjavur
மாலை மாற்றல் ஊஞ்சல் உற்சவத்துடன் திருக்கல்யாணம் | Sitha Raman Thirukalayanam | Thanjavur
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி ஏகாந்த சேவையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக துவங்கியது. பெண்கள் சீர் வரிசை சுமந்து வந்தனர். சீதா சமேத ராமர் மண பந்தலில் மாலை மாற்றல் ஊஞ்சல் வைபோகம் நடந்தது. தொடர்ந்து சீதா ராமர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏப் 24, 2024