திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | tirukkalyanam | swamimalai
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / tirukkalyanam / swamimalai முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படையாக சுவாமி மலை உள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி திருமணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவையொட்டி கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களை சுவாமிமலை கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். திருமண விழாவில் மாலை மாற்றல் வைபவம், ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வு உள்ளிட்டவை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க முருகன் வள்ளி திருமணத்தை கோலாகலமாக நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மார் 19, 2025