அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் கதறல் | Heavy Rain | Wasted Paddy Bags | Thanjavur
அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் கதறல் / Heavy Rain / Wasted Paddy Bags / Thanjavur தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 12 நாள்களாக நெல் கொள்முதல் நடக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகளை சாலை ஓரங்களிலும், கொள்முதல் நிலைய வாசலிலும் அடுக்கி வைத்து விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். வெயில், மழையில் நெல்மூட்டைகளை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. பல இடங்களில் அடுக்கி வைக்கப்பட்ட பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தையும், பருத்தியப்பர் கோயிலில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கையும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த விவசாயிகள், அரசே எங்களை காபந்து பண்ணு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காபந்து பண்ணு என முழக்கமிட்டனர். மேலும், 12 நாட்களாக நெல்லை கொட்டி வைத்து இரவு, பகலாக காத்திருக்கிறோம் என வாக்குவாதம் செய்தனர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மற்றும் தி.மு.க.வினர், முழக்கமிட்ட விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அமைச்சரின் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் நெல் கொள்முதல் செய்ய தீர்வு கிடைக்கவில்லை.