தமிழக, கேரள பக்தர்கள் பூக்குழி இறங்கி பரவசம்
தமிழக, கேரள பக்தர்கள் பூக்குழி இறங்கி பரவசம் | 1200 devotees from Tamil Nadu, Kerala descend to Pookuthi and enjoy | Theni தேனி மாவட்டம் நாகலாபுரம் ஐயப்பன் கோயில் பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 32 வது ஆண்டை முன்னிட்டு நாகலாபுரம் சுற்றியுள்ள கிராமம் மற்றும் கேரளா மாநிலம் கட்டப்பனை, ராஜா காடு, வண்டிப்பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக இன்று காலை ஐயப்பன், முருகன் சுவாமிகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து விடிய விடிய பஜனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு 1200க்கும் மேற்பட்ட ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சரண கோஷம் முழங்க பூக்குழி இறங்கினர். இதில் 10 வயது முதல் 80 வயது வரையுள்ள பக்தர்கள் பூக்குழி வைபத்தில் பங்கேற்றனர். கிராமத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.