உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / மே 1ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா | Theni | Flag hoisting for the Chitra Pournami festival

மே 1ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா | Theni | Flag hoisting for the Chitra Pournami festival

மே 1ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா | Theni | Flag hoisting for the Chitra Pournami festival | Kannagi Temple மங்கள தேவி கண்ணகி கோயில் தமிழக - கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டம் கூடலுார் அருகே விண்ணேற்றிப்பாறை மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் உள்ளது. இக்கோயிலில் வரும் மே 1 ஆம் தேதி சித்ராப் பௌர்ணமி விழா வெகு விமர்சையாக நடக்கிறது. இதற்கான கொடியேற்று விழா ஆண்டு தோறும் மங்கள தேவி கண்ணகி கோயில் மலை அடிவாரம் தமிழகப் பகுதியான கூடலூர் பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு மங்கள தேவி கண்ணகி கோயில் கொடியேற்றம் கூடலுார் பளியன்குடி மலையடிவாரம் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் சார்பில் நடந்தது. இந்தாண்டு கூடலுார் பளியன்குடி வனத்திற்குள் கொடியேற்றம் நடத்த வனத்துறை அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து கம்பம் மங்கள தேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொடியேற்றும் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடி மற்றும் பச்சை மூங்கிள் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியுடன் கூடிய கொடிக் கம்பத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து நட்டு கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து மங்கள தேவி கண்ணகியை வழிபட்டனர். கொடியேற்று விழாவில் கம்பம் மங்கள தேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று கண்ணகி தேவியை வழிபட்டனர்.

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை