உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / கண்ணகி கோயிலில் குவிந்த 50 ஆயிரம் பக்தர்கள் | mangala devi kannagi temple | chitra pournami

கண்ணகி கோயிலில் குவிந்த 50 ஆயிரம் பக்தர்கள் | mangala devi kannagi temple | chitra pournami

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கல தேவி கண்ணகி கோயில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சித்திரை முழு நிலவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழகம் சார்பில் தேனி மாவட்ட நிர்வாகமும் கேரளா சார்பில் இடுக்கி மாவட்ட நிர்வாகமும் செய்தன. திருவிழாவையொட்டி மங்கல தேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழகம் கேரளாவை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகியை வழிபட்டனர். பாதுகாப்புக்காக தமிழக, கேரள போலீசார் 1,500 பேர் நிறுத்தப்பட்டனர்.

ஏப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை