/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் பண மாலை | Theni | Maternal Uncle Seer
சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் பண மாலை | Theni | Maternal Uncle Seer
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தனர் நாகராஜன். விவசாயியான இவரது மகள் காதணிவிழா வருசநாட்டில் தடபுடலாக நடைபெற்றது. தாய்மாமன்கள் சீர்வரிசையாக அண்டா, பழங்கள், இனிப்பு, கார வகைகள், அலங்கார பொருட்களுடன் 500 க்கும் மேற்பட்ட தாம்பூலங்களை 3 டிராக்டர்கள் உள்பட 10 வாகனங்களில் சீர் கொண்டு வந்தனர். வரும் வழியில் கரகாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடியபடி மேளதாளங்கள், வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக வந்தனர். குதிரை சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் பண மாலை தாய்மாமன் மாலையாக அணிவிக்கப்பட்டது. 10 வாகனங்களில் தாய்மாமன் சீர்கொண்டு சென்றதை அங்குள்ளவர்கள் வியந்து பார்த்தனர்.
அக் 20, 2024