உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வனுடன் வாக்குவாதம்

திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வனுடன் வாக்குவாதம்

திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வனுடன் வாக்குவாதம் / Theni / Pipe theft in Jal Jeevan Scheme connections / BJP Allegation தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஆய்வுக்கூட்டம் முடிந்து வெளியே வந்த தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனை தேனி மாவட்ட பாஜ தலைவர் ராஜபாண்டி தலைமையிலான பாஜகவினர் முற்றுகையிட்டனர். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்பட்டது. தற்போது அந்த குழாய்களை காணவில்லை. திருடு போனதாக சந்தேகம் உள்ளது. இதற்கு அதிகாரிகள், கான்ட்ராக்டர் தான் காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜவினர் முன்னிலையில் கலெக்டர் ரஞ்சித் சிங்கிடம் புகார் குறித்து ஆய்வு செய்து 20 நாட்களில் அறிக்கை தரும்படி எம்பி உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.

செப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி