/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ நெல்லையில் மர்ம நபர்கள் கைவரிசை | Tirunelveli | Petrol bomb | Police investigation
நெல்லையில் மர்ம நபர்கள் கைவரிசை | Tirunelveli | Petrol bomb | Police investigation
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் தியேட்டரில் அமரன் சினிமா திரையிடப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை 4 மணிக்கு வந்த மர்ம நபர் இருவர், தியேட்டர் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு எஸ்கேப் ஆகினர். குண்டுகள் தியேட்டர் காம்பவுண்ட் சுவருக்குள் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை: தியேட்டருக்கும் சேதம் இல்லை. அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து குண்டு வீசிய மர்ம நபர்களை மேலப்பாளையம் போலீசார் தேடுகின்றனர். அமரன் சினிமா ஒரு சமுதாயத்திற்கு எதிராக இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. தடை விதிக்க வலியுறுத்தி சில அமைப்பினர் தியேட்டர்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
நவ 16, 2024