நெல்லை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உருக்குலைந்தது | Stone Quarry in the Bird Sanctuary Area | Vil
நெல்லை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உருக்குலைந்தது | Stone Quarry in the Bird Sanctuary Area | Village People Protest | Nellai நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரி உள்ளது. பாறைகளை உடைக்க சக்தி வாய்ந்த மருந்து பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் சத்தம் 7 கி.மீ., துாரம் வரை கேட்கிறது. வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகிறது. வலசை பறவைகள் தினமும் உயிரிழக்கின்றன. கல்குவாரி துாசியால் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் மாசுபடுகிறது. மீன்கள் செத்து மிதப்பதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குவாரியை மூடக்கோரி ஏற்கனவே கலெக்டரிடம் மனு அளித்தனர். சரணாலயத்தைச் சுற்றி 10 கி.மீ., சுற்றுச்சூழல் உணர்வு மண்டலம் அமைக்க வலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த செப்டம்பர் 18ம் தேதி தாசில்தார் ஆய்வு செய்து கல்குவாரி இயங்காது என உறுதியளித்தார். எனினும் குவாரி வழக்கம் போல் செயல்படுகிறது. இதைக் கண்டிது, குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கூடாரம் அமைத்து போராட்டக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள், போராட்டக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் உட்பட 20 பேரை கைது செய்து வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. குவாரியை மூடும் வரைப் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.