சென்னை வீரர் முதலிடம்| International chess tournament| Tiruvarur
சென்னை வீரர் முதலிடம்| International chess tournament| Tiruvarur திருவாரூர் மங்கள்வரதர் மண்டபத்தில் சர்வதேச விரைவு செஸ் போட்டி நடக்கிறது. திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் S.S academy இணைந்து போட்டிகளை நடத்துகின்றனர். டாக்டர் அகோரசிவம் போட்டிகளை துவக்கி வைத்தார். ஒன்பது சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சரவணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நடுவர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் சென்னை சாம் முதலிடம் வென்றனர் இரண்டாம் பரிசு கோவை நிர்மல் மற்றும் முன்றாம் இடம் தெலுங்கானா கிரிநாதன் வென்றார் முதல் பரிசு 20 ஆயிரம் இரண்டாம் பரிசு 15 ஆயிரம் மூன்றாம் பரிசு 10ஆயிரம் என மொத்தம் 2இலட்சம் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. வெற்றி கோப்பைகளை மருத்துவர் அகோரசிவம் மற்றும் சதுரங்க கழக செயலாளர் சரவணன் வழங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்