உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | Sports | Thiruvarur

150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | Sports | Thiruvarur

திருவாரூரில் சிவ வடிவேல் உடையார் நினைவு இறகு பந்து போட்டி சிவவடிவேல் உடையார் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் 11, 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஒற்றையர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை இறகு பந்து அகாடமி தலைவர் செந்தூர்பாரி துவக்கி வைத்தார். இதில் 150 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றோருக்கு மேலுடையார் விளையாட்டு மற்றும் இறகு பந்து அகாடமி செயலாளர் பாலவைத்தியலிங்கம் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி