₹ 5 லட்சம் மோசடி செய்த ஆசாமி | ₹ 5 crore reward for converting | Fraudster arrested | Tuticorin
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலம் சொக்கநாதன் என்ற IDல் இருந்து ஆசாமி பேசினார். அவரிடம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினால் 10 கோடி ரூபாய் தருவதாக அள்ளி விட்டார். அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கவும், வருமானவரி செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 5 லட்சம் ரூபாய் அனுப்பும்படி கூறினார். அவரது பேச்சை நம்பிய அந்த இளைஞர் 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாயை Gpay மூலம் IDயில் பேசிய ஆசாமிக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து பணம் பெற்ற ஆசாமிக்கு பேச இளைஞர் பல முறை முயன்றும் முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினார். போலீஸ் விசாரணையில் தஞ்சாவூர் ஆனந்தம் நகரை சேர்ந்த ராஜவேல் வயது 31 மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூர் சென்ற போலீசார் ராஜவேலிடம் முறைப்படி விசாரணை நடத்தினர். அவர் கோவில்பட்டி இளைஞரிடம் பண மோசடி செய்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் துாத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் உத்தரவுப்படி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.