உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சக மீனவர்கள் | Fishermen in the sea are miserable | Tuticorin

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சக மீனவர்கள் | Fishermen in the sea are miserable | Tuticorin

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரின் படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21ம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். கடந்த 26ம் தேதி கரை திரும்ப வேண்டியவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர். இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆறு பேரும் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் படகுகளில் சென்று அவர்களை மீட்டு நேற்று கரைக்கு அழைத்து வந்தனர். டீசல் காலியானதால் சர்வதேச கடல் பகுதிக்கு திசைமாறி சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர். மீனவர்களால்தான் ஆறு பேரும் மீட்கப்பட்டனர். இந்திய கடலோர காவல் படை ரோந்துக் கப்பல் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு ஏற்கனவே இருந்த அதிவேக ரோந்து படகை மீண்டும் புதிதாக வாங்கி, ஆபத்து காலங்களில் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் கயஸ் சொன்னார்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி