முறையான அடிப்படை முதலுதவி வசதி இல்லாததால் உயிர் பிரிந்ததாக குற்றச்சாட்டு
முறையான அடிப்படை முதலுதவி வசதி இல்லாததால் உயிர் பிரிந்ததாக குற்றச்சாட்டு/ Devotee death / Lack of basic necessities in temple/ Tiruchendur காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஓம் குமார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். கோயிலில் கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்ற ஓம்குமார் இயற்கை உபாதைக்கு வெளியே சென்றார் லைனில் நின்ற குடும்பத்தினர் முன்னேறி சுவாமி தரிசனத்திற்கு உள்ளே சென்றனர். திரும்பி வந்த ஓம்குமார் சுவாமி தரிசனம் செய்ய லைனில் பின்னால் நின்று உள்ளார். லைனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஓம்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.. கோயில் வளாகத்தில் அடிப்படை முதலுதவி மற்றும் அவசர வழி வசதி இல்லாததால் ஓம் குமாருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. லைனில் நின்றிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் முதலுதவி செய்தார் இதற்கிடையே சாமி தரிசனம் முடிந்து குடும்பத்தினர் வெளியே வந்தனர். திருச்செந்தூர் ஜி.ஹெச் தரப்பில் ஓம் குமார் மயக்கம் அடைந்ததாகவும் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் குடும்பத்தினருக்கு போனில் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தனர். ஹாஸ்பிடலில் ஓம் குமார் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் சிகிச்சை கொடுத்திருந்தால் ஓம் குமார் பிழைத்திருப்பார். கோயில் தரப்பில் சிசிடிவி காட்சிகளை தர மறுத்ததாக தெரிகிறது. மேலும் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தன போக்கால் ஓம் குமார் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினார்.