கொலை, கொள்ளை உட்பட 29 வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி
கொலை, கொள்ளை உட்பட 29 வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி | Tiruchendur | Police shot and apprehended a rowdy in broad daylight. தூத்துக்குடி மினி சகாயபுரத்தை சேர்ந்தவர் மரிய அந்தோணி அக்னஸ் வயது 35. இவர் மீது கொலை, கொள்ளை உட்பட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவாக இருந்தவரை போலீசார் தேடி வந்தனர். அவர் திருச்செந்தூர் சோனகன்விளை கானியாளன்புதூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. எஸ்பி தனிப்படை எஸ்ஐ ராஜபிரபு தலைமையிலான போலீசார் ஸ்பாட்டுக்கு விரைந்தனர். கானியாளன்புதூர் வீட்டில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்றார். சுதாரித்துக் கொண்ட எஸ்ஐ ராஜ பிரபு தனது கைத்துப்பாக்கியை எடுத்து ரவுடியை சுட்டார். அதில் ரவுடியின் வலது மார்பு - வயிற்றுக்கு இடையில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்தார். அவரை திருச்செந்தூர் அரசு ஹாஸ்பிடலில் போலீசார் அட்மிட் செய்தனர். சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.