குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கொடூரம்
குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கொடூரம் | Srivaikuntam | Police Arrest TVK Functionaries | Allegedly Deceiving a Woman தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அதே போல் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகியான ஜெயபால் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய அந்த பெண்ணை ராமநாதபுரம் ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கூறினார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் பாலமுருகன் மற்றும் ஜெயபால் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். தவெக நிர்வாகிகள் இருவர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.