/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் ஏற்பாடு | district chess competition | tirupur
திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் ஏற்பாடு | district chess competition | tirupur
திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் ஏற்பாடு / district chess competition / tirupur திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட சதுரங்க போட்டி அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை சங்கத் தலைவர் கார்த்திகேயன், பொதுச் செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தனர். போட்டியின் விதிமுறைகள், போட்டி நேரம் குறித்து, சைகை மொழியில் போட்டியாளர்களுக்கு எடுத்துரைத்தனர். போட்டியை மாவட்ட சதுரங்க சங்க நடுவர் கோபிகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். 50 க்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மார் 23, 2025