வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி | District Tennikoit Tournament| Tirupur
வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி | District Tennikoit Tournament| Tirupur திருப்பூர் காங்கயம் ரோடு, வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த போட்டிகளை பள்ளி தாளாளர் தர்மலிங்கம் துவக்கி வைத்தார். முன்னதாக, மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற 21 அணியைச் சேர்ந்த 80 வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில், தாராபுரம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 2-1 என்ற செட் கணக்கில் கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி அணியை வென்றது. 17வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில், தாராபுரம் ஜேசீஸ் அணி 2-1 என்ற செட் கணக்கில் அவிநாசி எம்.எஸ்., வித்யாலயா அணியை வென்றது. 19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அணி 2-1 என்ற செட் கணக்கில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 14 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில், எம்.எஸ்., வித்யாலயா மெட்ரிக் அணி, 2-1 என்ற செட் கணக்கில் திருப்பூர் வித்ய விகாஷினி அணியை வென்றது. 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் தாராபுரம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி அணி 2-1 என்ற செட் கணக்கில் அவிநாசி எம்.எஸ்., வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 19 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் செயின்ட் அலோசியஸ் மெட்ரிக் பள்ளி அணி 2-1என்ற செட் கணக்கில் எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.