கையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்கள் மீது தாக்குதல்|Tiruppur
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் மது போதையில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் கையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றித் வந்தார். பஸ் ஸ்டாண்டில் நின்ற நபரை தாக்கி அட்ராசிட்டியில் ஈடுபட்டார். இதனை தடுக்கும் வகையில் டிரைவர் ஒருவர் இளைஞரை தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கினார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வடமாநில இளைஞரை தடுத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் வடமாநிலத்தை சேர்ந்த சஞ்சித் என்பது தெரியவந்தது. அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்த திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜன 08, 2024