ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணி நிதிலன்அசத்தல் ஆட்டம் | Tirupur | DSC Challenger Trophy
திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் அகில இந்திய அளவில் 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும் டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி 2025 கிரிக்கெட் போட்டி முருகம்பாளையம் வயர்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் கடந்த 12 ம் தேதி துவங்கியது. 2ம் நாள் முதல் போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்தது. பேட்டிங் செய்த திரிபணித்துரா கிரிக்கெட் அகாடமி அணி 25.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்தது. திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணி பவுலர் நிதிலன் 6 ஓவர் வீசி 15 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். எளிய இலக்கை விரட்டிய டி.எஸ்.சி அணி 13.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பவுலிங்கில் அசத்திய நிதிலன் பேட்டிங்கிலும் அசத்தினர். 30 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று ஆட்ட நாயகனாக தேர்வானார். 2வது போட்டியில் சென்னை டான் போஸ்கோ அணி கேரளா ஆர்.எஸ்.சி மற்றும் எஸ்.ஜி கிரிக்கெட் அணிகள் மோதின. 8 அணிகள் பங்கேற்றுள்ள டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபியில் 4 போட்டிகள் முடிந்துள்ளது. வரும் 17 வரை லீக் போட்டிகள் நடைபெறும். தகுதி பெறும் அணிகள் 18 ம் தேதி அரையிறுதியில் சந்திக்கிறது. கோப்பை யாருக்கு என்பதை இறுதி செய்யும் இறுதி போட்டி வரும் 19 ம் தேதி நடக்கவுள்ளது.