உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Gymnastics Tournament | Tripur

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Gymnastics Tournament | Tripur

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு / Gymnastics Tournament / Tripur திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கர்னல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட போட்டிகளுக்கான கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். மாவட்டத்தின் ஏழு குறுமைய அளவிலான போட்டிகளில் வெற்றி 51 பேர் இப்போட்டியில் பங்கேற்று விளையாடினர். 14 வயது மற்றும் 17 வயது மாணவர் பிரிவில் முறையே வி.கே., அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வருஷன் பாண்டி, தினேஷ் முதலிடம் பெற்றனர். 19 வயது பிரிவில் கணபதிபாளையம் அரசு மேல்நிலை்பள்ளி மாணவர் சுமன் முதலிடம் பெற்றார். மாணவியர் பிரிவில் எம்.எஸ்., வித்யாலாயா பள்ளி மாணவி தியா, 17 வயது மற்றும் 19 வயது பிரிவில் முறையே அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுலைக்கா பர்வின், இலக்கியா முதலிடம் பெற்றனர். இந்த ஆறு பேரும் மாநில போட்டிக்கு தேர்வாகினர்.

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை