/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ சிலை தயாரிப்பாளர்கள் கவலை| Ingrease In Electricity Charges|Idol makers worry
சிலை தயாரிப்பாளர்கள் கவலை| Ingrease In Electricity Charges|Idol makers worry
விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் சிலை தயாரிக்கும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சிலை தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயத்தை நோக்கி செல்கிறது. கோவிட் பாதிப்புக்கு பின் சிலை தயாரிப்பு தொழில் சூடு பிடித்துள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இத்தொழில் நடக்கும். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் மின் கட்டணம் தற்போது 10 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வருவாயின் பெரும் பகுதி மின் கட்டணத்திற்கே செலுத்த வேண்டியுள்ளது.
ஜூலை 27, 2024