உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தமிழக ஜுடோ சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஜூடோ சங்கம் ஏற்பாடு | sports | Thirupur

தமிழக ஜுடோ சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஜூடோ சங்கம் ஏற்பாடு | sports | Thirupur

தமிழக ஜுடோ சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஜூடோ சங்கம் சார்பில் மாநில அளவிலான சப் ஜூனியர் போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் நடந்தது. மாணவர் பிரிவில் 30 கிலோவிற்கு கீழ் - 66 கிலோ எடை வரை ஒன்பது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவியர் பிரிவில் 27 கிலோவிற்கு கீழ் - 57 கிலோ எடைக்கு மேல் வரை ஒன்பது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 145 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 கிலோ மாணவியர் பிரிவில் ஹரிணி, 36 கிலோ பிரிவில் யுவாஞ்சிலின், 40 கிலோ பிரிவில் உத்ரா, 48 கிலோ பிரிவில் பாரதி, 52 கிலோ பிரிவில் காவ்யா, 56 கிலோ பிரிவில் கீர்த்தனி, 57 கிலோவிற்கு மேல் பிரிவில் லிதன்யா முதலிடம் பிடித்தனர். மாணவ, மாணவியர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் 18 பேர், அடுத்த ஆண்டு ஜனவரி டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டி ஏற்பாடுகளை மாவட்ட ஜீடோ மற்றும் மாநில ஜீடோ சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி