உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | District Level Swimming Compatition

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | District Level Swimming Compatition

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு / District Level Swimming Compatition / 351 Cadate Participate / Tirupur திருப்பூர் மாவட்டத்தில் புதிய விளையாட்டு போட்டிகள் கடந்த 6ம் தேதி துவங்கியது. 15 வேலம்பாளையம் ட்ரிக் அகாடமியில் நேற்று மாவட்ட நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 185 மாணவர் மற்றும் 166 மாணவிகள் என 351 பேர் பங்கேற்றனர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், 15 வேலம்பாளையம் ட்ரிக் அகாடமி செயலாளர் சிவக்குமார் துவக்கி வைத்தனர். பட்டர் ஃபிளை, ப்ரீஸ்டைல், பேக் ஸ்டோக், ஃபிரண்ட் ஸ்டோக், மெட்லி ரிலே உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் ஆர்வமுடன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இலக்கை நோக்கி நீந்தினர். மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டவர்களை மாநில போட்டிக்கு தேர்வு செய்தனர்.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி